28 March 2017

தேனீக்கள்- அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்


தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் சென்று தேனைச் சேமிக்கும், தேன் கூட்டில் கல்லைக் கொண்டு எறிந்தால் கொட்டவரும் என்று போதுமான அளவுதான் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் புத்திசாலித்தனமான பூச்சிகள். தேனீக்களால் அதிநவீன முறையில் தொடர்பு கொள்ள முடியும், அதுமட்டுமின்றி அவற்றின் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்குகளைக்கூட உணர முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    தேனீக்கள் மேலும் கீழுமாக ஆடிக்கொண்டு ஒன்றையொன்று தொடர்புகொள்வதாக பெரும்பாலானோர் கருதுகின்றனர், ஆனால் இவ்வாறு ஆடிக்கொண்டு தொடர்புக்கொள்வதில் ஒரு அறிவியல் யுக்தியுள்ளது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. தேனீக்களுக்கு நமது உலகம் உருண்டையாக இருப்பது தெரியும். அதனால் ஒரு உணவு எடுக்கச் சென்றுவிட்டு மீண்டும் வரும்போது தனது கூட்டினை அடைவதற்கு வரும்போது மேலும் கீழும் ஆடும் தேனீக்களைப் பார்த்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தான் எந்தக் கோணத்தில் சென்றால் கூட்டினை அடைய முடியும் என்பதைத் தெரிந்துக்கொள்ளும். 
        இதேபோல்தான் உணவு எங்குள்ளது என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு தகவலைப் பகிர்ந்துக்கொள்கிறது. இந்த மேலும் கீழுமாக ஆடும் ஆட்டத்தினை வைத்து சூரியனை நோக்கிச் செல்ல வேண்டுமா, சூரியனை விட்டு விலகிச் செல்ல வேண்டுமா அல்லது அங்கிருந்து எப்பக்கம் திரும்ப வேண்டும் என்று புரிந்துக்கொள்ளும். அது மட்டுமின்றி பூமியின் சுழற்சி மற்றும் மின்காந்த அலைகளைக் கணக்கிட்டு சரியான இடத்தையும் இவற்றால் ஞாபகப்படுத்திக் குறிப்பிட முடியும்.