22 April 2017

டைட்டானிக் மூழ்கும் போது அருகிலே இருந்தக் கப்பல்.

      'டைட்டானிக்'  1912 ஆம் ஆண்டில் மூழ்கிய ஒரு உல்லாச கப்பல் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம் ஆகும். ஆனால்  அது மூழ்கும்போது அதன் அருகில் மற்றொரு கப்பலும் இருந்தது என்பது எத்தனை பேர் அறிவோம்? 

       இந்த டைட்டானிக் கப்பல் 882 அடி 9 அங்குல நீளமும், 92 அடி 6 அங்குல அகலமும், 175 அடி  உயரமும் உடையது.

       1503 பயணிகளின் உயிரை தன்னுடன் கொண்டு சென்ற இந்த உல்லாச கப்பல் மூழ்கியபோது அதனைக் கண்ட கப்பலும் உள்ளது என கலிஃபோர்னியாவினை சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

     15 ஏப்ரல் 1912 அன்று வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த இந்த டைட்டானிக் கப்பல் தன் வழியே ஒரு பெரிய பனி பாறை இருப்பதை அறிந்து உடனே அதனுடன் மோதுவதை தவிர்க்க முயற்சித்தும் , முயற்சி பயனளிக்காமல் டைட்டானிக் அந்த பனிப்பாறையில் மோதியது. அதன் விளைவாக கப்பலின் கீழ் பகுதி சேதமடைந்து நீர் கப்பலின் உள்ளே புகுந்ததால் கப்பல் கடலில் மூழ்கியது. 

         ஆனால் டைட்டானிக் கப்பல்  மூழ்குவதற்கு முன்பாக அபாய ஒளியையும் மற்றும் அபாயக்குறியாக ராக்கெட் விளக்குகளை வானில் பாய்ச்சியது. அதனைக் கலிஃபோர்னியா கப்பல் தளத்தில் இருந்த அலுவலர்கள் கண்டுள்ளனர். அவர்கள் கப்பலின் கேப்டன் 
லார்டினை கண்காணிக்க அழைத்த போது அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. அந்த அபாய விளக்கு வேறு ஏதும் நிறுவனம் சார்ந்த குறிகளாகக் கூட இருக்கலாம் என அவர்கள் ஊகித்தனர். எப்படியிருந்தாலும் நிலை சரியில்லை என்பதை அங்கு இருந்த சிலர் உணர்ந்தனர்.

      டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது வானில் பாய்ச்சிய எட்டு வெள்ளை ராக்கெட்டுகள் அருகிலிருந்த கப்பல்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும், ஆனால் கேப்டன் லார்ட் ஒன்றும் செய்யாமல் போனது விதியின் சித்தாந்தம். சில மைல் தூரத்தில் இருந்தும் அவர்களை காப்பாற்றாததால் துயரமாக 1503 உயிர்கள் கடலில் கப்பலுடன் மூழ்கியது.

No comments:

Post a Comment