அரிது அரிது மனிதனாய் பிறப்பதரித்து என்பது ஒவ்வையாரின் கூற்று. அவ்வகையில் அறிந்து அறியாத புதிரும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் நம்மை வியக்கவே செய்கிறது . கோபமும், மரணமும் மனிதனால் எதிர்க்கொள்ள முடியாத எதிரி என்று சொன்னால் மறுக்கப்படாத உண்மையே! ஆனால் இன்றைய நிலையில் ஒரு மனிதன் மரணத்திற்கு அப்பால் மீண்டும் உயிர் ஜனிக்க முடியும் என்றல் அது வியப்பின் உச்சம் அல்லவா? ஆனால் இன்று வரை அது பூர்த்தியடையா ஓர் ஆராய்ச்சி என்பதே உண்மை. ஆம் வாசகர்களே நம்மில் பலர் இதை உணரவும் இல்லை அறியவும் இல்லை. ஜெர்மன், ரஷ்யா, அமெரிக்கா, போன்ற நாடுகள் இதற்கான ஆராய்ச்சியில் களம் இறங்கிய நாடுகளில் சில. பல வருடங்களுக்கு முன்பாகவே தீவிரமான முயற்சியை மேற்கொண்டு ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன மேற்கண்ட நாடுகள். இவற்றில் கிரியோனிக்ஸ் நிறுவனம் ( CRYONICS INSTITUTE ) மரணத்தை வெல்லுவதற்கான ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்குகிறது . இவர்களின் ஆராய்ச்சியின் மையப்பொருள் என்னவென்றால் மரணத்தை வென்று, நோய் நொடி இல்லாமல் மனிதனால் வாழ முடியும் என்பதை நிருபிப்பதே ஆகும்.

 |
|
CRYONICS- என்றல் கடுங்குளிர் எனப் பொருள்படும் . மனிதர்கள் இறந்தப் பிறகு கடுங்குளிர் மூலம் அவர்களின் உடல்கள் பாதுகாக்கப்படுகிறது . அவ்வகையில் இந்த செய்முறை மூலம் முதலில் பாதுகாக்கப்பட்டு வரும் உடல் JAMES.H.BEDFORD ( 20 APRIL1893- 12 JANUARY 1967). இவர் இயற்கை மரணம் எய்தியதும் இன்று வரை அன்னாரின் உடல் ALCOR LIFE EXTENSION FOUNDATION எனும் நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது உடல் கடுங்குளிர் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் உச்ச நீதி மன்றத்தில் விண்ணப்பம் செய்தார். அவர் கடந்த 17-ஆம் திகதி அக்டோபர் மாதம் புற்றுநோய் காரணமாக உயிர் இழந்தார். எதிர்காலத்தில் மீண்டும் உயிர் ஜனிக்கவே அவர் இம்முடிவை எடுத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றளவும் 145 மனித உடல்களும் 125 மிருக உடல்களும் இந்த கிரோனிக்ஸ் (CRYONICS ) நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடுங்குளிர் நம் உடலை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வோம் . இந்த கடுங்குளிர் மூலம் பாதுகாக்கப்படும் உடல்கள் 100 வருடங்கள் கடந்த பின்பும் எந்தவொரு சேதாளமும் அழிவும் இன்றி செழுமையாகவே தோற்றமளிக்கும். இதற்கு காரணம் நம் உயிர் நம் தேகத்தை பிரிந்தவுடன் நமது மூளை செயலிழந்து நம் இதயமும் செயலிழக்கிறது. இதனை தொடர்ந்து உடலில் உள்ள செல்கள் மற்றும் திசு காலப்போக்கில் அழிந்துவிடுகின்றன. இத்தகைய அழிவிலிருந்து மனித உடலை பாதுகாத்து மரணத்தின் பிடியிலிருந்து மீட்கவே இந்த ஆராய்ச்சி கலைக்கூடம் செயல்படுகிறது. இப்படி கடுங்குளிர் மூலம் பாதுகாக்கப்படும் உடல்கள் -196℃ சீதோஷ நிலையில் வைக்கப்படுகிறது . இதற்கு முக்கிய சில காரணங்களும் உள்ளது. மனிதன் மூளையை போன்ற அறிய பொக்கிஷம் வேறு எதுவும் இருக்கவே முடியாது. எவ்வளவு பதிவு வேண்டுமானாலும் பதிவு செய்யக்கூடிய ஆற்றல் உள்ளது மூளைக்கு. LONG-TERM MEMORY என்று அழைக்கப்படும் நீண்ட நாள் நினைவுகள் மூளையின் செல் மற்றும் மூலக்கூறுகளில் பதிவாகின்றன.இறந்துப்போன மனிதனின் மூளை பிராணவாயு இல்லாத காரணத்தால் மெல்ல மெல்ல செயலிழந்து விடுகிறது. ஆகவே ஒரு மனிதன் இறந்தவுடன் உடனடியாக இந்த கடுங்குளிர் செய்முறை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலன் மனிதனின் மூலையில் உள்ள நினைவுகள் மற்றும் திறமைகள் பாதுகாக்கப்படும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
நம்மில் பலர் இவ்வேளையில் யோசித்துக்கொண்டிருப்போம் . நிறைவு பெறாது, வருங்காலத்தில் உயிர் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இப்படி பாதுகாக்கப்படும் இந்த செய்முறைக்கு எவ்வளவு செலவாகும் என்று. 2011 வெளிவந்த தகவலின்படி அமெரிக்கா நிறுவனம் $28,000 முதல் $200,000 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. இதை அந்நாட்டு மக்கள் உயிர் காப்புறுதி மூலம் செயலாக்கம் செய்யலாம் என்று குறிப்பிடத்தக்கது. இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் சிலர் அவர்களின் தலை மட்டும் இந்த நிறுவனத்தால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அவர்களின் விண்ணப்பமே. நாளைய ஆராய்ச்சி இன்றைய முயற்சி. அறிவோம் அறிவியல். அறிந்தால் வியக்கவைக்கும் உண்மையே அறிவியல்.