17 December 2016

யார் இந்த ( OTZI )

இன்றைய வியப்பின் பார்வையில் ஓட்ஜி ( OTZI ). யார் இந்த OTZI. இவரின் சரித்திரம்தான் என்ன?

 


இவர் பெயர்  ஓட்ஜி. சுமார் கி.மு  3300- ல் வாழ்ந்த பனி மனிதன். இவரின் உடல் 1991-ஆம் ஆண்டு சிமிளுன் மலை  ( SIMILAUN MOUNTAIN) அதாவது ஆஸ்டரோலியா மற்றும் இத்தாலி நாட்டின் எல்லையில் கண்டெடுக்கப்பட்தது.  இப்படி பழமையான பல மம்மி கண்டுப்பிடிக்கப்பட்டாலும் இந்த மம்மி மட்டும் தனித்துவம் பெற்றது. 90% இந்த உடல் அப்படியே இருந்தது மற்றும் அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் பனியில் உறைந்துபோய் இருந்தன. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல் மட்டத்திலிருந்து  சுமார் 11,000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் அச்சுகொலையாமல் அந்த உடல் கிடைத்துள்ளது. பல வருடங்களாக மம்மி இருந்த இடத்தை ஓட்ஸ்ட்டல் ஆல்ப்ஸ் (OTZTAL  ALPS ) என்று அழைப்பார்கள். அதை தொடர்ந்தே இந்த மம்மிக்கு ஓட்ஜி (OTZI ) என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6-அடி வில்லும் 16 அம்புகளும், தாமிர கோடரிகளும் , கரடியின் தோல்களிலான உடைகளுடன் இறந்துப்போன ஓட்ஜி (OTZI )கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா ?
  

அவர் கடைசியாக சாப்பிட்டது சிவப்பு மானின் (RED DEER) இறைச்சி. அவர் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்ததையும் , அவருக்கு பல எலும்பு பிரச்சனைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள். இவர் பின்னாலிருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும் , அப்போது அவருக்கு வயது 45என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்கள். இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால் அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து அவர் மிகுந்த மன வேதனையில் இருந்திருக்கலாம் என்று அவரின் விரல் நகங்களில் உள்ள ரேகையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
 

 

கணினியின் துணையோடு அவரின் உருவத்தை வடிவமைத்து , அதை மெழுகு சிலையாக உருவாக்கினார்கள்.இதையெல்லாம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மற்றோன்றையும் செய்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஓட்ஜி- யின் (OTZI ) குரல் தளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் வழி  பனி மனிதன் எந்த வகையான மொழியில் பேசியிருக்கக்கூடும் என அறியமுடியும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். பொதுவாகவே எந்தவொரு மம்மி கிடைத்தாலும் பல புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வது வழக்கம். அப்படி இந்த பனி மனிதனின் குரல் எப்படி இருக்கும் மற்றும் அவரின் குரல் எப்படி ஒலித்திருக்கும்  என்று ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
 
வியப்பின் பார்வையில் பனி மனிதனின் குரல் என்று சொன்னால் வியப்பாகவே இருக்கும். பனிமனிதனின் குரல்வலை மற்றும் குரல்தளத்தை ஆராய்ச்சி  செய்த விஞ்ஞானிகள் அதன் மூலம் ஒரு பதிவை செய்தனர். அதில் பனிமனிதனின் குரல் ஒழித்திருக்கும் என்று ஒரு ஒலித்துணுக்கை உருவாக்கினார். ஆச்சரியம் என்னவென்றால் பனிமனிதனின் குரல் நம் தமிழை போன்ற ஒலிக்கிறது. எப்படி என்றல் அ ,ஆ , இ, உ ,ஊ  என்று உச்சரிக்கும் போது நமது நுரையிறலும், குரல்வளையும் மூச்சுக்குழலும் ஒன்றாக செயல்படுகிறது.அப்படி ஒலிக்கும் சொற்களை நுரையிறல் காற்றின் மூலம் வெளிப்படுகிறது.அப்படியே பனிமனிதனின் ஒலித்துணுக்கும் ஒப்பிடுகையில் பனிமனிதன் தமிழில்தான் பேசியிருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அன்று பனிமனிதனாலும் பேசப்பட்ட மொழியே தமிழ் மொழி. தமிழ் அவமானம் அல்ல அடையாளம் என்று புரிந்துக்கொள்ளடா தமிழா.