01 January 2017

கைதி மரம்

ஒரு மரம் கைது செய்யப்பட்டு 118 ஆண்டுகளைக் கடந்தும் கைதியாக பிணைத்து வைக்கப் பட்டிருப்பது விநோதம் அல்லவா?
பாகிஸ்தானின் லாண்டி கோட்டால்

ராணுவ முகாமில் இந்த மரத்தைக் காணலாம்.  "ஐயம் அண்டர் அரெஸ்ட்" என்ற பலகையுடன் நீண்ட இரும்புச் சங்கிலிகளால் கிளைகள் பிணைக்கப் பட்டு இருக்கின்றன.
மரத்தை கைது செய்தது யார்?.....எதற்காக? 
என்ற கேள்விகளுக்குப் பின்னால்  சுவாரசியம் உள்ளது. சுதந்திரத்துக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்திருந்த தருணம், இப்பகுதிகளை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.ஜேம்ஸ் ஸ்குவிட் எனும் ராணுவ தளபதி, இதே பகுதியில் வசித்து வந்தார். 
  ஒரு நாள் இரவில் குடிபோதையுடன் தெருவில் நடந்து வரும்போது திடீரென தன்னை யாரோ பின் தொடர்வதாக உணர்ந்தார். திரும்பிப் பார்த்தவர், தனக்கு பின்னல் மரம் இருப்பதை உணர்ந்து அப்படியே விட்டுவிட்டார். மறுநாள் இரவும் இதே உணர்வு ஏற்பட....... கூச்சல் போட்டு பாதுக்காப்பு வீரர்களை அழைத்து , என்னை அந்த மரம் பின்தொடர்ந்து வருகிறது, எனவே அதை கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.
    அதிகாரியின் உத்தரவை தட்ட முடியாமல் உடனடியாக இரும்புச் சங்கிலிகளை எடுத்து வந்து இணைத்து மரத்தின் நாலாபுறமும் தரையில் பெரிய கம்பி நட்டுவைத்துப் பிணைத்தனர்.
    1898இல் இந்தச் சம்பவம் நடந்தது. "மரத்தைக்கூட வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை", என்பதற்கு உதாரணமாகத் திகழட்டும் என்று பாகிஸ்தானியர்கள், சுதந்திரத்திற்குப் பின்னரும் அதில் இருந்து சங்கிலிகளை அகற்ற விரும்பவில்லை. தண்ணீர் ஊற்றுவது, காய்ந்த கிளைகளை அகற்றுவது என பராமரிப்புக்காக தனி ஆளே நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது அது சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது. தினந் தோறும் பலர் இங்கு வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment