09 January 2017

குகைகள் எவ்வாறு உருவாகிறது






 

      குகை என்பது மனிதனின் இருப்பிடமாகவும், மனிதன் தன்னை காட்டு விலாங்குகள் மற்றும் சீதோஷ்ண நிலையில் இருந்து காத்துக்கொள்ள பெரும் பங்கை புரிந்தது. ஆனால் இந்த குகைகள் எவ்வாறு உருவாகிறது என்று அறிவோமா?

     மழை நீர் மலைகளில் தொடர்ந்து வழிந்தோடும் வேளையில், மலை நீர் பாறைகளில் இருக்கும் ஓட்டைகள் மற்றும் விரிசல்களிலும் தன்  பயணத்தை மேற்கொள்கிறது. அப்படி சிறுதுளிகளின் படைப்பே இந்த குகைகள். எப்படி என்று யோசிக்கிறீர்களா? மலைப் பாறைகளின் எடுக்குகளில் உள்ள சுண்ணாம்பு என்ற ஒரு மெது  மெதுப்பான கல் கரைந்து பாறைகளின் இடையே விரிசல் ஏற்படுகிறது. இந்த விரிசலானது நாளடைவில் சிறுக சிறுக மழை , இயற்கையின் சதி மற்றும் சீதோஷண அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குகையாகவே உருவெடுக்கிறது.
        உலகின் மிக ஆழமான குகை ஜியோர்ஜியா நாட்டில் உள்ள வொரொன்யா (VORONYA ) எனச் சொல்லப்படுகிறது. இந்த குகைக்கு  குருபெரா(KURUBERA ) என்று மற்றோரு பெயரும் உண்டு.

 






இந்த வொரொன்யா குகையின் நீளம் 2197 மீட்டர் ஆகும்.

உலகின் மிக நீளமான குகை அமெரிக்கா நாட்டில் கெண்டக்கி (KENTUCKY) மாநிலத்தில் உள்ள மம்மோத் (MAMMOTH) குகையாகும். அதன் நீளம் 651.8கி.மீட்டராகும் (K.M)