09 May 2017

மூளையின் செயல்பாட்டினை மாற்றும் புதிய மருத்துவம்


      மூளையின் ஒருங்கிணைப்பினை மின் காந்தத் தூண்டலின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என தற்போதைய ஆய்வில் மேற்கு ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் பலம் குறைந்த தொடர் மின் காந்தத் துடிப்புகளின் உதவியால் எலிகளைச் சோதனை செய்தனர். அதில் எலிகளின் அசாதாரண நரம்பு இணைப்புகள் கூட சாதாரண நரம்பு இணைப்புகளாக மாற்றப்பட்டதைக் கண்டறிந்தனர்.

       நரம்பு அமைப்புகளில் மாற்றுத்திறன் உடையவர்களை இந்த ஆராய்ச்சியின் மூலம் சரிசெய்ய இயலும். மேலும் மூளையின் செயல்பாட்டினை மேம்படுத்தவும் இதனை பயன்படுத்த இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது சரியாக வேலை செய்யாமல் உள்ள மூளையின் அசாதாரணப் பகுதிகளைக்கூட இந்த மின் காந்தத் தூண்டலின் மூலம் சாதாரணமாக மாற்ற இயலும். அத்துடன் எலிகளிடம் செய்த சோதனை வெற்றி பெற்றதால், இவை மனிதனுக்கு சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாகத்தான் இருக்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.

No comments:

Post a Comment