27 August 2019

பிட்காயின் எனப்படும் எண்ணிம நாணயம்

பிட்காயின்  எனப்படும்  எண்ணிம நாணயம் 

           நேரத்தையும் கடந்து சுறுசுறுப்பாக இயங்கும் மனிதன், நாளுக்கு நாள் தன்னையும் தன் திறமைகளையும் மேன்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு அவசர காலக் கட்டத்தில் வாழ்கிறான் . உணவு முதல் உயிரை காப்பாற்றும் சேவை அனைத்தும் இன்று இணையவசம் என்று சொன்னால் அது மிகையாகாது. தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இதற்கும் பிட்காயின் எனப்படும் இந்த எண்ணிம நாணயத்திற்கும் என்ன தொடர்பு? ஒரு நிமிட வாசிப்பு உங்களுக்கு தெளிவை தரும்....

    2008-இல் இந்த பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதை இருவாக்கியவரின்  பெயர் "SATOSHI NAKAMOTO". ஆனால் அவர் தன் அடையாளத்தை இவ்வுலகிற்கு தெரிய படுத்த விரும்பாத நிலையில் அவர் தன்னை மின்னஞ்சல் முகவரி மூலம் மறைத்துக்கொண்டார். அவர் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் , எங்கு இருக்கிறார் என்ற அணைத்து கேள்விகளுக்கும் இன்றளவும் பதில் யாரிடமும் இல்லை. இதனை அறிந்த பலர் தன்னை "SATHOSHI NAKAMOTO" என்று நிருபிக்கும் முயற்சியில் உள்ளனர். தங்க சுரங்கம் அமைத்தது யாரோ, அதை தன்வசம் கொள்ள பலர் போராடும் நிலையே இங்கே . தன்னை வெளிக்காட்டாமல் எப்படி இந்த நாணயத்தை உருவாக்கினார் தெரியுமா, அவர் மின்னஞ்சல் முகவரி மூலம் 12 கணிப்பொறி நிரலர்களை தொடர்புக்கொண்டு அவரின் இந்த எண்ணிம நாணயத்தின் உருவாக்கத்தின் பயன்பாட்டையும் அதன் நன்மைகளையும் எடுத்துரைத்தார். அதன் சிறப்பையும் அதன் தேவையையும் அறிந்த அதே 12 கணிப்பொறி நிரவலர்கள் இந்த பிட்காயின் உருவாக்கத்தில் ஈடுப்பட்டு வெற்றியும் கண்டனர். 3rd JANUARY 2009 அன்று முதல் BITCOIN  உருவாக்கப்பட்டது (THE FIRST BITCOIN). அதுதான் இறுதியாக SATOSHI அவர்கள் தன் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொண்டது. உலகத்தின் நலன் கருதி அவரின் உருவாக்கத்தை தந்துள்ளார் என்பதே உண்மை.....

BITCOIN உருவாக்கப்பட்ட காரணம்.
                  1998- இல்  ஆசியாவில் மிகவும் மோசமான  பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது , அதன் விளைவால் மலேசியாவின் பொருளாதார தாக்கமும் கடுமையானது . சுமார் 83,865 பேர் தன் வேலைகளை இழந்தனர். 1997இல் மலேசியா  ரிங்கிட் சுமார் RM2.88 இருந்த வேளையில் 50% வீழ்ச்சி கண்டு RM4.88 என்ற நிலைக்கு தள்ளப்பட்டன. 1998-இல் வீழ்ந்த பொருளாதாரம் இன்றளவும் சரிசெய்யப்படாமல் இருக்கும் வேளையில், 2008-இல் மாபெரும்  ஒரு உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை கண்டது. இதனால் பல பணக்காரர்கள் தங்களின் வாழ்க்கையை இழக்க நேரிட்டது, பல வங்கிகள் மூடப்பட்ட நிலை. அப்பொழுதுதான் இந்த பிட்காயின் உருவாக்கம் மிகவும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக இருந்தது. உலகத்தில் இருக்கும் அணைத்து நாணயத்திற்கும் பின்னணியில் ஒரு அரசாங்கமும் அதன் பொருளாதாரமும் இருக்கும். ஆகவேதான் பொருளாதார வீழ்ச்சியின் போது அந்த நாட்டின் வளர்ச்சி மட்டும் இல்லாமல் அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பும் குறைகின்றது. பிட்காயின் மதிப்பு எந்த நாட்டின் அரசாங்கத்தையும், எந்த ஒரு பொருளாதாரத்தையும் சார்ந்து இல்லாததால் இது பலரின் கவனத்தை ஈர்த்தது. எந்த நாடும் பிட்காயினை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. 2009-இல் ஒரு பிட்காயின் மதிப்பு சுமார் RM0.40 என்று இருந்தது. ஆனால்  இன்று RM43.000 (27th AUG 2019) என்ற மதிப்பில் உள்ளது. முழுக்க மக்களின் கட்டுப்பாட்டில் பிட்காயின் இருப்பதால் இதன் பயன்பாடும் மக்களின் தேவையை பூர்த்தி செய்கின்றது. யாரேனும் ஒருவர் 2009-இல் வெறும் RM100 கொடுத்து பிட்காயின் வாங்கியிருந்தார் என்றால் அவரிடம் 250 பிட்காயின் இருந்திருக்கும். அதனை அவர் இன்றும் தந் வசம் வைத்திருந்தால் அதன் மதிப்பு சுமார் RM10 கோடியை தாண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

           பிட்காயின் என்பது வாருங்கலத்தின் நாணயம் என்று நினைகின்றனர் . ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் மலேசியாவில் பிட்காயின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன என்று,அதற்கு சான்றாக மலேசியாவில் பல இடங்களில் பிட்காயின் பயன்பாட்டிற்காக தன்னியக்கச் சொல்லி இயந்திரம் (BITCOIN ATM) இயங்கி வருகின்றது. அது மட்டும் இன்றி மலாக்கா மாநிலத்தை உலகின் முதல் பிட்காயின் நகரமாக மாற்றியமைக்க மலேசியா அரசாங்கம் முயற்சிகளை செய்து வருகின்றது காரணம் உலகின் முதல் பிட்காயின் நகரமாக இருக்குமாயின் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்காக. மற்றும் நம் நாட்டின் பொருளாதாரத்தை நிலை செய்யவும் இந்த பிட்காயின் ஒரு பெரிய பங்காற்றும். பிட்காயின் எந்த நாட்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு நாணயம். இது ஒரு எண்ணிம நாணயம் என்பதால் என்னிடம் இருக்கும் பிட்காயின் மதிப்பு பிறருக்கு தெரிய வாய்ப்பு இல்லை, மற்றும் எந்த ஒரு தனிநபராலும் என்னுடைய பிட்காயின் கண்க்கினை முடக்க இயலாது.ஆகையால் வெளிநாட்டிற்கு பயணிக்கும் பயணிகள் பிட்காயின் பயன்படுத்துவது மிகவும் நன்று. பலவிதமான வரி தொல்லைகளிருந்து இந்த பிட்காயின் உங்களின் பணத்தை பாதுகாக்கும், மற்றும் உங்களின் பணத்தின் மதிப்பையும் உயரச்செய்யும்.

          பிட்காயின் பல நாட்டின் மக்களின் பணத்தை பாதுக்காக்கும். பிட்காயின் பயன்பாடு அமலுக்கு வந்தால், நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் ஊழலுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும். இதனால் மக்களின் பணம் பாதுகாப்பகவும் செழிப்பான ஒரு பொருளாதார நிலையையும் உருவாக்கக் கூடும். பிட்காயின் பரிமாற்றங்களை BLOCKCHAIN எனப்படும் ஒரு துல்லியமான பதிவேட்டில் பதிவேற்றப்படும். இந்த BLOCKCHAIN இன்று துறைகளை சார்ந்த அமைப்புகளுக்கு ஒரு தீர்வாக அமைந்துள்ளது. ஆகவே BLOCKCHAIN பயன்பாடு அதிகரிக்கவும் செய்கிறது பிட்காயின் பயன்பாட்டினை போலவே.

பிட்காயின் எப்படி இயங்கும் 
     பிட்காயின் பயன்பாடு மிகவும் எளிமையானது. இது ஒரு சகா -சகா என்ற பரவல் கட்டமைப்பைக்கொண்ட கணினி பிணையமாக்கம் (PEER-TO-PEER). இந்த கட்டமைப்பை பயன்படுத்துவதால் பிட்காயின் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் மூன்றாவது நபரின் உதவியோ அல்லது, வங்கியின் அனுமதியோ, தேவை இல்லை. ஒருவர் தன்  வசம் உள்ள பிட்காயினை உலகில் எந்த மூலையில் இருக்கும் அவர் நண்பருக்கு அனுப்பலாம் அதுவும் குறைந்த கட்டணத்துடன். இதை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இருவரிடமும் முறையாக பதிவு செய்யப்பட்ட பிட்காயின் பதிவேட்டு (BITCOIN WALLET) இருக்க வேண்டும். அணைத்து பிட்காயின் பரிமாற்றமும் மக்களின் பார்வையில் இருப்பதால் யாராலும் பிட்காயின் பரிமாற்றத்தில் திருடவோ, அல்லது ஏமாற்றவோ முடியாது காரணம் இதன் பரிமாற்றம் மிகவும் ஒரு கடினமான கணக்கு வடிவத்தில் இருக்கும். அந்த கணக்குகளை சரிசெய்ய அதி நவீன வேகம் பொருந்திய கணினிகளை (ANTMINER ) கொண்டு பிட்காயின் சுரங்கியர்கள் (BITCOIN  MINERS) சரிசெய்து அதற்கான சன்மானத்தையும் பெறுகின்றனர். உலகத்தின் தேவைக்கு வெறும் 21மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே உருவாக்கப்படும். இந்த பிட்காயின் உருவாக்கமும் இந்த பிட்காயின் சுருங்கியர்கள் பொறுப்பேற்கின்றனர். அதன் உருவாக்கமும் முறையான திட்டமிட்டலால் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும். ஆகையால் பிட்காயின் உருவாக்கம் 2140-ஆம்  ஆண்டுவரை நீடிக்கும். அன்றுதான் அந்த இறுதியான கடைசி பிட்காயின் உருவாக்கப்படும்.

          இணையவழி பொருட்கள் வாங்குதல் பலரின் நேர பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு என்றுதான் சொல்லவேண்டும். அப்படி வாங்கும் பொருட்களுக்கு நாம் நம் வாங்கியின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனால் பல இணைய குறும்பர்கள் உங்கள் வங்கியின் விவரங்களை திருட நேரிட்டு உங்களின் பணத்தை இழக்க கூடும. பிட்காயின் மூலம் இணையவழி பொருட்கள் வாங்குவதால் இத்தகைய இழப்புகளை குறைக்க உதவும். காரணம் பிட்காயின் பயன்பாடு அதிக பாதுகாப்பானது. 

           இதுப்போன்று பல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் பிட்காயின் பயன்படுத்துவதற்கு. இருப்பினும் அதன் விவரங்களையும் , அதன் அம்சங்களையும் அறிந்து இதில் ஈடுபடுவது நினைவில் கொள்ள வேண்டும். காரணம் பொறுப்பற்ற பலர், குறுகிய வழியில் பணக்காரர் ஆகா வேண்டும் என்ற பேராசையில் பொய்யான தகவல்களை கொடுத்து உங்களை ஏமாற்ற கூடும். இப்படி ஏமார்ந்த சிலரும் இருக்கின்றனர், அதே வேளையில் இன்று பிட்காயின் மூலம் கோடீஸ்வரர் ஆனவர்களும்  பலர் உள்ளனர். தீதும் நன்றும் பிறர் தர  வாரா என்பதற்கு ஏற்ப முறையாக கற்றுக்கொள்வோம், நமக்கான நன்மையையும் தீமையையும் நாம் முடிவு செய்வோம்.

       மேலும் விவரங்கள் பெறுவதற்கும், தமிழில் பிட்காயின் பற்றி அறிந்துகொள்ளவும், பிட்காயின் மூலன் பகுதி நேரம் பணம் சம்பாதிக்கும் முறையையும் கற்றுக்கொள்ள,  

MR. JEYARAS = 014-9035700( whatsapp / call ) தொடர்புக்கொள்ளவும். 




No comments:

Post a Comment