கரிசலாங்கண்ணியை உணவாகவோ, மருந்தாகவோ பயன்படுத்தினால் , அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனியின் நிறம் மாறும்.கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து , இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ ' அதிகம் உள்ளன.
கரிசலாங்கண்ணி கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
- மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இலைகளை ஆய்ந்து எடுத்து பருப்புடன் சேர்த்து வேகவைத்து சாம்பாராகவும், கூட்டுக்கறியாகவும், பொறியலாகவும், கடையலாகவும், செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம். புளி சேர்க்கக் கூடாது. மிளகாய்க்குப் பதில் மிளகு சேர்க்க வேண்டும்.
- மஞ்சள் காமாலை நோய்க்கும் மிக சிறந்த மருந்தாகும். இக்கீரையைச் சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும்.
- கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாதத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.
- கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும், கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது.
- குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை இரண்டு சொட்டில்/ எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.அடிக்கடி சளி பிடிப்பது குறைந்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பர்.
- கரிசலாங்கண்ணி கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெரும்.
- பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.


No comments:
Post a Comment