30 December 2016

பாரதியார் கவிதை -வேண்டுவன


வேண்டுவன 

மனதி லுறுதி வேண்டும் 
வாக்கினிலே யினிமை வேண்டும் 
நினைவு நல்லது வேண்டும் 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
கனவு மெய்ப்பட வேண்டும் 
கைவசமாவது விரைவில் வேண்டும் 
தனமும் இன்பமும் வேண்டும் 
தரணியிலே பெருமை வேண்டும் ...


கண் திறந்திட வேண்டும் 
காரியத்தி லுறுதி வேண்டும் 
பெண் விடுதலை வேண்டும் 
பெரிய கடவுள் காக்கவேண்டும் 
மண் பயனுற வேண்டும் 
வானகமிங்கு தென்பட வேண்டும் 
உண்மை நின்றிட வேண்டும் 
ஓம் ஓம் ஓம் ஓம் ....