22 December 2016

எது உலக அதிசயம்

1. திருநெல்வேலி மாவட்டத்தில்  இருக்கும் நெல்லையப்பர்  கோவில்  கல் தூண்களைத்  தட்டினால்  ச,ரி,க, ம,ப,த,நி  என்கிற 7 ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே அது உலக அதிசயம்




2. திருப்பூரில் உள்ள குண்டடம்  வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது இந்த இந்த மாதத்தில்,இந்த வடிவத்தில் மற்றும் எந்த நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

3.இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு திகதியில், நேரத்தில் மாலைப் போல் வந்து சிவலிங்கத்தின்  மீது விழும். இது நிகழ்வதற்கு எவ்வளவு துல்லியமாக சிந்தித்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். வாடா சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர்  சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலின் சிவலிங்கம் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

4. மதுரை மீனாக்ஷி  அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிறப்பு, கட்டிட வேலைப்பாடுகளில்  உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால் அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி போதாது. ஓசோன் (OZONE  ) 20-ம்  நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம் மற்றும் அதன் முக்கியத்துவம், அனைத்துமே அங்கு வைக்கப்பட்துள்ளது. 


5. யாழி என்கிற மிருகத்தின் சிலை. பழங்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம்,  ஆனால் ஆயிரம் குத்து சண்டை வீரர்கள் முயற்சித்தாலும் யாழி வாயில் உள்ள உருண்டையை வெளிய உருவ முடியாது. 



6.கங்கைகொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றுக்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் உள்ளது. அந்த சிங்கத்தின் சிலையில் ஒரு நுழைவாயில் இருக்கும். அதன் வழியா உள்ளே சென்று கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலிருந்து பார்த்தால் , அங்கு குளிப்பது தெரியாத. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட  கிணறு அது. அது போல் அந்த கோவில் கருவறையில் உள்ள சுவர்களில் மரகதக்கற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயிலடித்தல் உள்ளே குளிரும். அக்கோவிலின் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் அளவில் ஒரு பெட்டகம் உள்ளது . போர் காலத்தில் ஆயுதங்களும், வீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் ராஜேந்திர சோழர். 


இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால், ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும்.. ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்த வல்லரசாலும்  செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம் ஆனால் உருவ முடியாத அதிசயத்தை யாராலும் உருவாக்க முடியாது. தமிழரின் கட்டிடக்கலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுக்காப்போம்.

அனுப்பியவர்: குணசுந்தரி @ GUNASUNTHARI
                                   (காஜாங் , KAJANG)